KARPATHU IAS Academy Official
37.2K subscribers
1.57K photos
29 videos
1.14K files
4.51K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
பொதுத்தமிழ் வினா - விடைகள்
1. வேளாண் வேதம் எனப்படும் நூல் எது? - நாலடியார்
2. நான்மணிக்கடிகை என்ற நூலினை இயற்றியவர் யார்? - விளம்பி நாகனார்
3. 'முதல் இலக்கணம்" எனப்படும் நூல் - அகத்தியம்
4. "இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்" எனக் கூறும் நூல் எது? - நான்மணிக்கடிகை
5. கடிகை என்பதன் பொருள் என்ன? - அணிகலன்
6. 'தமிழர் வேதம்" என்ற சிறப்பிற்குரிய நூல் - திருமந்திரம்
7. ஓதலினை (கற்றல்) விட சிறந்தது எது? - ஒழுக்கமுடைமை
8. இளமையில் சிறந்தது எது? - மெய்பிணி இன்மை (நோய் இல்லாமை)
9. 'புலவராற்றுப்படை" என்று அழைக்கப்படும் நூல் - திருமுறுகாற்றுப்படை
10. 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்று பாடியவர் யார்? - பாவேந்தர் பாரதிதாசன்
11. 'நாடகக் காப்பியம்" என்றழைக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம்
12. 'நெடுந்தொகை" என்று அழைக்கப்படும் நூல் - அகநானூறு
13. 'தெய்வ நூல்" என்று போற்றப்பட்ட நூல் - திருக்குறள்
14. 'பஞ்ச சிறுகாப்பியம்" என்ற சிறப்பிற்குரிய நூல் - ஐஞ்சிறுகாப்பியம்
15. 'குறவஞ்சிப்பாட்டு" என்று அழைக்கப்படும் நூல் - குற்றாலக் குறவஞ்சி
👍61🔥18
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்

தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்:

ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர்

🔥1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை
🔥1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி
🔥1957 - (விருது வழங்கப்பட வில்லை)
🔥1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி
🔥1959 - (விருது வழங்கப்பட வில்லை)
🔥1960 - (விருது வழங்கப்பட வில்லை)
🔥1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்
🔥1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)
🔥1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
🔥1964 - (விருது வழங்கப்பட வில்லை)
🔥1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா
🔥1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம்
🔥1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்
🔥1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச ராகவன்
🔥1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்
🔥1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி
🔥1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி
🔥1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்
🔥1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்
🔥1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு
🔥1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்
🔥1976 - (விருது வழங்கப்பட வில்லை)
🔥1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி
🔥1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்
🔥1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்
🔥1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்
🔥1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்
🔥1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா
🔥1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்
🔥1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி
🔥1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) - அ. ச. ஞானசம்பந்தன்
🔥1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்
🔥1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்
🔥1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா. செ. குழந்தைசாமி
🔥1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாமிர்தம்
🔥1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்
🔥1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்
🔥1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்
🔥1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்
🔥1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
🔥1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்
🔥1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்
🔥1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்
🔥1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - சா. கந்தசாமி
🔥1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்
🔥2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்
🔥2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா
🔥2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்
🔥2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து
🔥2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
🔥2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி
🔥2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) - மு.மேத்தா
🔥2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்
🔥2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி
🔥2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு
🔥2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்
🔥2011 - காவல் கோட்டம் (புதினம்) - சு. வெங்கடேசன்
🔥2012 - தோல் (புதினம்) - டேனியல் செல்வராஜ்
🔥2013 - கொற்கை (புதினம்) - ஜோ டி குரூஸ்
🔥2014 - அஞ்ஞாடி - பூமணி
🔥2015 - இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) - ஆ. மாதவன்
🔥2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன்
🔥2017 - காந்தள் நாட்கள் (கவிதைகள்) - இன்குலாப்
🔥2018 - சஞ்சாரம் (புதினம்) - எஸ். ராமகிருஷ்ணன்
🔥2019 - சூல் (புதினம்) - சோ. தர்மன்
🔥2020 - செல்லாத பணம் (நாவல்) - இமையம்
🔥2021 - சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சிறுகதைகள்) - அம்பை
💐💐💐💐💐💐💐💐💐💐
👍48🔥21
TNPSC தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்.

1. கருப்பு பந்து முனை பேனாவினால் (Black ball point pen ) மட்டுமே shade செய்ய வேண்டும்.

2. ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் shade செய்து இருந்தால் இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

3. விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை
சரியாக குறிப்பிட வேண்டும்.

தேர்வருக்கு விடை தெரியவில்லை எனில் E shade செய்ய வேண்டும்

தேர்வர்கள் இந்த எண்ணிக்கையை rough ஆக எழுதி பின் OMR இல் பதிவு செய்ய வேண்டும்
எண்ணிக்கை தவறாக குறிப்பிட்டு இருந்தால் overwrite பண்ணலாம்.
அறை கண்காணிப்பாளர் இந்த எண்ணிக்கை சரியாக உள்ளதா என ஒரு முறை எண்ணிப் பார்த்து கையொப்பமிட வேண்டும். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

4. தேர்வு முடிவுற்றவுடன் OMR இல் தேர்வு எழுதுபவரின் இடது கை பெருவிரல் ரேகை பெறவேண்டும் கையொப்பம் பெற வேண்டும். அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும்.

5. தேர்வர்களின் hall ticket photo வை பார்த்து சரியான நபர்தான் என்பதை அறிந்து அனுமதிக்க வேண்டும் தேர்வர்கள் வாட்டர் கேன் ,id proof, hall ticket mask வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

6.Pencil,erase, correction fluid, electronic Gadgets such as mobile phone,watch, Bluetooth device, calculator..... அனுமதி இல்லை, எந்த ஒரு Electronics சாதனங்களும் அனுமதி இல்லை. சந்தேகத்துக்கிடமான Watch அணிந்திருந்த கழட்டி வைத்து விட்டு வர வேண்டும்

Cellphone புத்தக பை அனைத்து தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வைக்க வேண்டும்.

7. தேர்வரை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை

8.Rest room செல்ல அனுமதி இல்லை

9.12:45மணிக்கு முன்னர் செல்ல அனுமதி இல்லை அவ்வாறு மீறி சென்றால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

10. OMR sheet இரண்டு பக்கம் இருக்கும்
1. PERSONALISED OMR portions.
2. ANSWER portion of “USED” OMR answer Sheets

தேர்வு முடிவுற்றவுடன் OMR இன் இரண்டு portion ஐயும் தனித்தனியாக பிரித்து chief இடம் ஒப்படைக்க வேண்டும்.

Seating plan W shaped

11. அறை கண்காணிப்பாளர் 8:15 மணிக்கு venue இல் /பள்ளியில் இருக்க வேண்டும்.
8:45 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும். செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

9:00 மணிக்கு தேர்வர்கள் தேர்வு அறையில் அமர வேண்டும்.

முதன்மை கண்காணிப்பாளர் 9 மணிக்கு கேள்வித்தாள் bundle பிரித்து அறை கண்காணிப்பதற்கு அளிக்க வேண்டும்.

9:15 மணிக்கு இரண்டு தேர்வர்களிடம் கையொப்பம் பெற்று அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்கள் இடம் கேள்வித் தாள்களை கொடுக்க வேண்டும்.
ஏதேனும் குறைபாடு உடைய Question booklet இருந்தால் வேறு Question Booklet கொடுக்கப்பட வேண்டும்.

Question booklet இல் எந்த ஒரு டிக் mark எந்தவொரு குறியீடும் இடக்கூடாது அவ்வாறு செய்தால் TNPSC ஆல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

9:00 மணிக்கு short bell அடிக்கப்படும் OMR sheet தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.

Attendance தேர்வரின் கையொப்பம் பெற வேண்டும் hall sketch fill செய்ய வேண்டும்.

Absent தேர்வர்களின் OMR part I red ball point ஆல் குறுக்கு கோடு இடப்பட்டு அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இட வேண்டும்.

9:15 மணிக்கு short bell அடிக்கப்படும் Question Booklet தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் Short bell அடிக்கப்படும்.

12:20 warning short bell அடிக்கப்படும்

12:30 மணிக்கு Long bell அடிக்கப்படும்
OMR sheet இல் Personalised portion இல் விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை
சரியாக குறிப்பிட வேண்டும்

12:45 மணிக்கு overbell Long bell அடிக்கப்படும்

12:45 மணிக்கு மேல் தேர்வர்களை தேர்வு அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும்.
👍48
Group 2 Exam .
How was the paper
தேர்வு எப்பிடி இருந்தது
Anonymous Poll
13%
Easy
68%
Moderate
15%
Tough
4%
Very Tough
26🤔19👍17👏6😁5